1 லட்சம் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி விற்பனை சாதனை

0

ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக் விற்பனைக்கு வந்த 9 மாதங்களில் 1 லட்சம் அலகுகள் விற்பனை ஆகி ஹோண்டா 125 சிசி பிரிவு சந்தையில் மீண்டும் வலூவான தளத்தினை பதிவு செய்துள்ளது.

honda cb shine sp

Google News

10.57 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் ஷைன் எஸ்பி பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் ஈக்வலைஸர் கொண்ட காம்பி பிரேக் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

ஹீரோ கிளாமர் , யமஹா சல்யூடோ , டிவிஎஸ் ஃபீனிக்ஸ்,  பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் சுசூகி சிலிங்ஷாட் போன்ற பைக்குகளுடன் சந்தையை சிபி ஷைன் எஸ்பி உள்ளது.

  • Honda CB Shine SP Drum – ரூ 69,454
  • CB Shine SP Disc – ரூ 72,182
  • CB Shine SP CBS – ரூ 74,365

{ அனைத்தும் சென்னை ஆன்ரோடு  விலை விபரம் }