2005 முதல் 2013 வரை தயாரிக்கப்பட்ட பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் செவர்லே தவேரா கார்களை மாசுக் கட்டுப்பாடு பிரச்சனைகளின் காரணமாக ஜிஎம் திரும்ப பெறுகின்றது.
பிஎஸ் 3யில் 2.5 லிட்டர் என்ஜினும் பிஎஸ் 4 யில் 2.0 லிட்டர் என்ஜினும் திரும்ப பெறப்படுகின்றது. மாசுக் கட்டப்பாடு விதிகளை சரிவர பூர்த்தி செய்ய தவறிவிட்டதால் இவற்றை மட்டும் திரும்ப பெறுகின்றது.
கடந்த மாதம் முதல் தவேரா, செயில் யுவா, போன்ற கார்களின் உற்பத்தியை தற்காலிகமாக செவர்லே நிறுத்தி வைத்துள்ளது. இந்த வாரம் இவற்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாம்.