ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரிவு நிறுவனம் வருகின்ற ஜூலை மாதம் முதல் மாசு உமிழ்வு பிரச்சனைக்காக 1.90 லட்சம் கார்களை இந்திய சந்தையில் திரும்ப அழைக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

Volkswagen-2BJetta

 

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாசு உமிழ்வு மோசடியால் உலகயளவில் 11 மில்லியன் கார்களில் இந்த பிரச்சனை உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக பலநாடுகளில் மாசு உமிழ்வு பிரச்சனைக்கு ஏற்ற தீர்வான மென்பொருள் மேம்பாட்டினை செய்து சரிசெய்து வருகின்றது. இந்த மோசடியால் ஃபோக்ஸ்வேகன் குழமம் நன்மதிப்பினை இழந்தது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் தலைமை மார்கெட்டிங் தலைவர் கமல் பாசு  பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில் வருகின்ற ஜூலை முதல் அடுத்த 10 மாதங்களுக்கு மாசு உமிழ்வால் பாதிக்கப்பட்ட 1.90 லட்சம் ஃபோக்ஸ்வேகன் கார்களில் மென்பொருள் மேம்படுத்துவதற்காக திரும்ப அழைக்கப்பட உள்ளது.  அமெரிக்காவில் மென்பொருள் மேம்படுத்தி சரிசெய்யப்பட்டதை போலவே இந்தியாவிலும் செய்யப்பட உள்ளது.

வருகின்ற ஜூலை முதல் சம்பந்தப்பட வாடிக்கையாளர்களை ஃபோக்ஸ்வேகன் டீலர்கள் தொடர்புகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மென்பொருளை மேம்படுத்த எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

மாசு உமிழ்வு பிரச்சனையால் பெரிதும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் வர்த்தக பாதிப்பு தற்பொழுது மெல்ல இயல்புநிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விலை நாளை வெளியாகின்றது.