100 டன் எடையுள்ள ரயிலை இழுக்கும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார் 100 டன் எடையுள்ள ரயில் பெட்டிகளை சுமார் 10 கிமீ தொலைவு இழுத்துள்ளது. போயிங் 757 விமானத்தின் எடைக்கு இணையாக இந்த 3 ரயில் பெட்டிகளும் உள்ளது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரின் இழுவைதிறன் 2.5 டன் என தரச்சான்றிதழை மட்டுமே பெற்றுள்ளது.

landrover-discover-sport-vs-train

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ம்யூசியம்ஸ்பான ஸ்டெயின் ஆம் ரேயின் டிராக்கில் உள்ள
வரலாற்று சிறப்புமிக்க ரெயின் நதியின் குறுக்கே அமைந்நுள்ள 935 அடி நீளம் மற்றும் பள்ளதாக்கில் இருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்டீல் பாலத்தின் வழியாக பயணித்து 10 கிமீ தொலைவினை கடந்துள்ளது.

Land-Rover-discovery-sport-train-pull

 

2.5 டன் மட்டுமே இழுக்கும் திறனை பெற்றுள்ள காராக தரசான்றிதழ் பெற்றுள்ள டிஸ்கவர் ஸ்போர்ட் எஸ்யூவி கார் 60 மடங்கு கூடுதலாக உள்ள 108 டன் எடையை இழுத்துள்ளது. இந்த காரில் 2.2 லிட்டர் இஞ்ஜினியம் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஆற்றல் 177.5bhp மற்றும் 420Nm இழுவைதிறனை பெற்றுள்ளது. மேலும் இதில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 9 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ரியல் பெட்டிகளை இழுக்கும் வீடியோ