இந்தியா வாகன சந்தையில் மாபெரும் வெற்றி பெற்ற ரெனோ க்விட் காரின் வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் புதிய வேரியன்ட்களை வருடத்திற்கு ஒன்று என விற்பனைக்கு கொண்டு வர ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

 

கடந்த செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த ரெனால்ட் க்விட் இதுவரை 1,07,033 கார்கள் விற்பனை செய்துள்ளது. மேலும் பல ஆண்டுகளாக சிறிய ரக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மாருதி சுஸூகி ஆல்ட்டோ காரினை தடுமாற வைத்துள்ளது.

இந்தியா ரெனோ சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் சுமீத் ஆட்டோகார் இந்தியா இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “வாடிக்கையாளர்கள் வருடக்கனக்கில் புதிய க்விட் மாடலுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது , மிக விரைவில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய மாடல் வெளியாகும்” என கூறியுள்ளார்.

க்விட் வெற்றியால் ரெனோ நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிக வேகமாக 5 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது. மேலும் 2023 ஆண்டிற்குள் இந்தியாவின் முதல் 3 ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக ரெனோ இடம்பிடிக்க திட்டமிட்டுள்ளது.

renault-kwid-expo-2016

 

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த ரெனோ க்விட் கிளைம்பர் மற்றும் ரேஸர் கான்செப்ட் மாடல்கள் மேலும் கடந்த வாரத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற சாவ் பவுல்லோ வாகன கண்காட்சியில் காட்சிக்கு வந்த ரெனோ அவுட்சைடர் கான்செப்ட் போன்றவைகள் அடுத்தடுத்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெனோ க்விட் காரில் 0.8 லிட்டர் ,1.0 லிட்டர் மற்றும் க்விட் ஏஎம்டி மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

உதவி ; ஆட்டோகார்இந்தியா