உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 40 பெட்ரோல் மற்றும் டீசல் கார் மாடல்களின் திட்டத்தை ரத்து செய்துள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்களுக்கு பல பில்லியன் யூரோ முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றது.
ஃபோக்ஸ்வேகன் , ஆடி , போர்ஷே ,ஸ்கோடா ,சீட் , பென்ட்லீ , புகாட்டி , லம்போர்கினி , மேன் ,ஸ்கேனியா , ஃபோக்ஸ்வேகன் கமெர்சியல் மற்றும் டூகாட்டி மோட்டார்சைக்கிள் போன்ற 12 பிராண்டுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமம் உலக அளவில் 340க்கு மேற்பட்ட கார் மாடல்களை மற்றும் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.
மிகப்பெரிய டீசல் என்ஜின் மாசு உமிழ்வு மோசடியால் நற்பெயரை இழந்த ஃபோக்ஸ்வேகன் அதனை தற்பொழுது ஈடுகட்டி வரும் நிலையில் அடுத்த தலைமுறை கார் மாடல்களை எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.
அடுத்த 10 வருடங்களில் 30க்கு மேற்பட்ட மின்சார கார்கள் மற்றும் தானியங்கி கார்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 2025 ஆம் வருடத்துக்குள் ஆண்டுக்கு 3 மல்லியன் எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த கார் மாடல்கள் நிறுத்தப்படும் என்பதற்கான உறுதியான தகவல்கள் இல்லையென்றாலும் பெரும்பாலான மாடல்களை சந்தையிலிருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் டீசல் மாசு உமிழ்வு மோசடியால் €16.2 பில்லியன் அளவிற்கு அபராதம் செலுத்தியுள்ளது.
கட்டுரை உதவி ; https://global.handelsblatt.com/
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…