சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் அசோக் லேலண்ட் 1922 4X2 ஹாலேஜ் டிரக் மாடல் 20 அடி, 22 அடி, 24 அடி மற்றும் 32 அடி நீளம் என மாறுபட்ட வகைகளில் பல்வேறு சிஎன்ஜி டேங்க் ஆப்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ், பார்சல் லோடுகள், ஆட்டோ-பார்ட்ஸ் மற்றும் எஃப்எம்சிஜி போன்ற பயன்பாடுகளுக்கான CNG வாகனங்களுக்கான தேவையை இப்போது தொழில்துறையில் அதிகரித்து வருகிறது, மேலும் இந்த புதிய முயற்சி எங்கள் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும், வேகமாக வளர்ந்து வரும் CNG ஆப்ஷனில், உலகளவில் முதல் 10 வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.
Ashok leyland 1922 4X2 CNG
18.5 டன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அசோக் லேலண்டின் 922 4X2 ஹாலேஜ் டிரக் மாடலில் H6 CNG இன்ஜின் 162 kW (220 hp) மற்றும் 700 Nm வெளிப்படுத்துகின்றது. சிஎன்ஜி டேங்க் ஆப்ஷனை பொறுத்தவரை, 570 லிட்டர், 750 லிட்டர், 780 லிட்டர், 840 லிட்டர், 1080 லிட்டர் மற்றும் 1,200 லிட்டர் என மாறுபட்ட வகையில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
20 அடி, 22 அடி, 24 அடி மற்றும் 32 அடி நீளம் என நான்கு விதமாக கிடைக்கின்ற டிரக்கில் சிங்கிள் சார்ஜில் முழுமையாக 1,150 கிமீ பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
1922 4X2 CNG டிரக்கிற்கு நான்கு ஆண்டுகள் அல்லது 400,000 கிலோமீட்டர் வரை அசோக் லேலண்ட் உத்தரவாதம் வழங்குகின்றது.