கனரக வாகனங்கள் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து அசோக் லேலண்ட் டிரக்குகளுக்கும் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான சான்றிதழை பெற்ற முதல் வரத்தக வாகன தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்குகின்றது.
GVW 16.2 டன்னுக்கு அதிகமான அனைத்து கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்களும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக முதல் வர்த்தக தயாரிப்பாளராக அசோக் லேலண்ட் ஆராய் மூலம் சான்றிதழை பெற்றுள்ளது.
இந்த மைல்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த அசோக் லேலண்ட் தலைவர், தீரஜ் இந்துஜா, “வர்த்தக வாகனத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அசோக் லேலண்ட் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகின்றது. மேலும், எங்கள் கனரக வாகன வரம்பில் பிஎஸ் 6 உமிழ்வு தரத்தை மேலும் பூர்த்தி செய்வதற்கான இந்த சாதனை தொழில்நுட்ப முன்னோடியாக எங்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பிஎஸ் 4 முதல் பிஎஸ் 6 வரையிலான குறுகிய மாற்றம் காலக்கெடு இருந்தபோதிலும், நாங்கள் விரிவான சோதனைகளைச் செய்துள்ளோம், மேலும் 7 மாதங்கள் நாங்கள் கூடுதலாக சோதனை செய்ய உள்ளோம். வாடிக்கையாளர்கள் இலகுரக மற்றும் நடுத்தர வரம்பில் உள்ள வாகனங்களில் பிஎஸ் 6 விரைவில் மாற்றப்படும். 70 ஹெச்பி முதல் 360 ஹெச்பி வரையிலான திறனிலும் பிஎஸ் 6 வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலே முதன்முறையாக யூரோ 6 டிரக்கினை காட்சிப்படுத்திய இந்தியாவின் முதல் வர்த்தக நிறுவனமாக அசோக் லேலண்ட் விளங்குகின்றது.