கேமரா கண்களில் சிக்கிய ரெனால்ட் HBC காம்பேக்ட் எஸ்யூவி – ஆட்டோ எக்ஸ்போ 2020

0

Renault Hbc

வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுதப்பட உள்ள ரெனோ நிறுவனத்தின் HBC காம்பேக்ட் எஸ்யூவி காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள விட்டாரா பிரெஸ்ஸா முதல் வென்யூ எஸ்யூவி வரை இந்த மாடல் எதிர்கொள்ள உள்ளது.

Google News

இந்தியாவில் கிடைக்கின்ற ரெனால்ட் க்விட், ட்ரைபர் போன்ற கார்களின் CMF-A+ பிளாட்ஃபாரமில் வடிவமைக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி மாடலில் ஸ்டீயரிங் உட்பட பல்வேறு பாகங்கள் ட்ரைபரில் உள்ளதை பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக இந்த எஸ்யூவி காரின் முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் பம்பர் போன்றவை கேப்டூர் காரின் உந்துதலை பெற்றிருக்கலாம்.

சாதாரன வேரியண்டுகளில் 16 அங்குல வீல், சிறப்பான வீல்பேஸ் வழங்கப்பட உள்ளதால் தாராளமான இடவசதியை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாடல் சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா QYI எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

renault-HBC-front-spied

HBC என்ற குறீயிடு பெயரில் தயாரிக்கப்படுகின்ற கைகெர் (Kiger) எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் ரெனால்ட் காம்பேக்ட் எஸ்யூவி விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகத்திற்கு வெளியிடும் முன்னதாக வரவிருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எஸ்யூவியின் தயாரிப்புக்கு நெருக்கமான பதிப்பை ரெனால்ட் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

renault-HBC-rear-spied