சேட்டக் சவால்.., டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகை விபரம்

0

டிவிஎஸ் க்ரியோன்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக க்ரியோன் கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Google News

ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட டிவிஎஸ் க்ரியோன் கான்செப்ட் வெளியிடப்பட்ட நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் சோதனை செய்யப்பட்டு வரும் படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளதால் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்ட தகவலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்கூட்டரில் 3 லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற 12 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 0-60 கிமீ வேகத்தை மணிக்கு எட்டுவதற்கு 5.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இதில் இடம்பெற உள்ள பேட்டரி 80 சதவீத சார்ஜிங் ஆவதற்கு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும், கிரியோன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 80 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் மோட்டார் தயாரிக்க உள்ள க்ரியோன் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவு நுட்பத்தின் வாயிலாக ஸ்மார்ட் மொபைல்கள் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பேட்டரி சார்ஜர், சர்வீஸ் ரிமைன்டர், டாக்கோமீட்டர் ஆகியவற்றுடன், க்ரியோன் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ள ஆப் வாயிலாக ரீஜெனேர்டிவ் பிரேக்கிங், பார்க்கிங் அசிஸ்ட், ஜிபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ஸ்கூட்டரில் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வந்துள்ளது.

ஆனால் விற்பனைக்கு வெளியாகும்போது இந்த மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்சு 120-150 கிமீ வரை வழங்கப்படலாம். இந்தியாவில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற சேட்டக், ஏதெர் 450, ஒகினாவா ஐ பிரைஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் வெளியிட உள்ளது.