கோவிட்-19 வைரஸ் பரவலால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைகளுக்கு கூடுதலான அவகாசத்தை மோட்டார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
லாக் டவுன் அமலில் உள்ள நிலையில் ஹோண்டா டூ வீலர்ஸ், ஹூண்டாய், டொயோட்டா, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சார்ந்தவற்றை பெறுவதற்கு சலுகைகளை அறிவித்துள்ளது. மற்ற முன்னணி மோட்டார் நிறுவனங்களும் இது தொடர்பான சலுகைகளை அறிவிக்க உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மே 2020 வரை நீட்டித்துள்ளது.
ஹோண்டா டூ வீலர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை பெற உள்ள வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் நீட்டிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2020 ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின், வாடிக்கையாளர்களில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 30, 2020 வரை உள்ள இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை பெற ஜூன் 30, 2020 வரை நீட்டித்துள்ளது.
மற்ற நிறுவனங்களும் விரைவில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.