ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் அறிமுகம் – ஜெனிவா மோட்டார் ஷோ 2017

0

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. 789 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 812 சூப்பர்ஃபாஸ்ட் காரில் சிறப்பு சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட்

70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி சிறப்பு வண்ணமாக வெளியிடப்பட்டுள்ள சிவப்பு நிறத்தை ரோஸா 70 அனி (Rosso 70 Anni) என  ஃபெராரி குறிப்பிட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 6.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக  789 HP பவர் மற்றும் 718 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

 

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளுகின்ற 812 சூப்பர்ஃபாஸ்ட் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிமீ ஆகும்.

மேலும் முதன்முறையாக ஃபெராரி காரில் எலக்ட்ரானிக்  பவர் ஸ்டீயரியங் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாடலில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் அம்சங்களுடன் வடிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் படங்கள்

[foogallery id=”16753″]