கேடிஎம் 790 ட்யூக் ப்ரோடோடைப் அறிமுகம் : EICMA 2016

0

2016 EICMA மோட்டார் ஷோ அரங்கில் கேடிஎம் 790 ட்யூக் ப்ரோடோடைப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ரோஷமான ஸ்டைலிங் அம்சங்களை கொண்ட 790 ட்யூக் இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் புதிய வடிவ தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட டியூக் 790 பைக்கில் இடம்பெற உள்ள2 சிலிண்டர்களை கொண்ட 800சிசி  எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Google News

790 ட்யூக் ப்ரோடோடைப் மாடலில் முன்புற டயர்களுக்கு இரு டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் , முனபக்கத்தில் டபிள்யூபி சஸ்பென்ஷன் மற்றும் பின்பக்கத்தில் மோனோ சாக் அப்சார்பரை பெற்றிருக்கும். இதில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக , ரைட் பை வயர் நுட்பம் , ரைடிங் மோட்கள் , அகலஙமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , மை ரைட் ஆதரவு என பலவற்றை பெற்றதாக விளங்கும்.

 

டியூக் 790 எஞ்சின் மாடலை அடிப்படையாக கொண்ட ஆர்சி , அட்வென்ச்சர் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்டிலும் அட்வெனச்சர் பைக்குகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் உற்பத்தி நிலை கேடிஎம் 790 ட்யூக் மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.