புதிய நிசான் மைக்ரா டீஸர் வெளியீடு – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

0

அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் புதிய தலைமுறை நிசான் மைக்ரா அறிமுகம் செய்யப்பட உள்ளதை டீஸர் வாயிலாக நிசான் உறுதிசெய்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய நிசான் மைக்ரா சர்வதேச அளவில் விற்பனைக்கு வரலாம்.

ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-B பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள புதிய மைக்ரா கார் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் வெளியான ஸ்வே கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மைக்ரா காரின் தோற்றம் , உட்புறம் மற்றும் இன்ஜின் ஆற்றல் போன்றவற்றில் மாறுதல்கள் பெற்றிருக்கும்.

Google News

தோற்ற அமைப்பில் முன்புறத்தில் எல்இடி முகப்பு விளக்குகள் , பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , முகப்பில் நேர்த்தியான வி – வடிவ மோஷன்கிரில் , புதிய பம்பர் , பக்கவாட்டில் புதிய அலாய் வீல் வடிவம் , பின்புறத்தில் ஸ்பாய்லர் , பம்பர் , டெயில் விளக்குகள் போன்றவற்றில் மாறுதல் இருக்கும். விற்பனையில் உள்ள இன்ஜின் ஆப்ஷனே தொடராம்.

2017 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய தலைமுறை நிசான் மைக்ரா இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் . இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ரா கார் பெரிதான வரவேற்பினை பெற தவறியுள்ள நிலையில் ஏற்றுமதி சந்தையில் மட்டுமே சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தி வருகின்றது.  வருகின்ற 29ந் தேதி பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் சர்வதேச அளவில் புதிய தலைமுறை நிசான் மைக்ரா அறிமுகம் செய்யப்பட உள்ளது.