வோக்ஸ்வேகன் ஐடி கான்செப்ட் அறிமுகம் – 2016 பாரீஸ் மோட்டார் ஷோ

0

2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் எலக்ட்ரிக் கார்களுக்கான வோக்ஸ்வேகன் ஐடி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் ஐடி கான்செப்ட் மாடல் 400 முதல் 600 கிலோமீட்டர் வரை ஒரே சார்ஜில் பயணிக்கும் வகையிலான மாடலாக இருக்கும்.

VW%2BI.D.%2B19

எதிர்கால ஆட்டோமொபைல் உலகின் மிக முக்கியமான இடத்தினை பிடிக்க உள்ள மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான கான்செப்ட் மாடல்கள் மற்றும் தொடக்கநிலை புராஜெக்ட்கள் போன்றவற்றை அனைத்து முன்னனி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ள நிலையில் முதன்முறையாக உற்பத்திக்கு செல்ல உள்ள வோக்ஸ்வேகன் நிறுவனம் எலக்ட்ரிக் கான்செப்ட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஐடி கான்செப்ட் மாடலை அடிப்படையில் ஹேட்ச்பைக் ,செடான் , க்ராஸ்ஓவர் , எம்பிவி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் என ஐந்து பிரிவுகளில் அறிமுகம் செய்ய உள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் மாடலான ஐடி கான்செப்டில் 168 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்படிருக்கும். ஒரு சிங்கிள் சார்ஜ் செய்தால் 400 முதல் 600 கிமீ ( 249 to 373 miles) வரை பயணிக்கும் வகையிலான பேட்டரி திறனை பெற்றதாக இருக்கும்.   0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மேலும் வோக்ஸ்வேகன் ஐடி கான்செப்ட் உச்சபட்ச வேகம் மணிக்கு 159 கிமீ ஆகும்.  80 சதவீத சார்ஜ் ஏறுவதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.  பேட்டரிபேக் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஐடி கான்செப்ட் மாடலின் நீளம்  4100மிமீ,  1800மிமீ அகலம் மற்றும் 1530மிமீ உயரத்தினை பெற்றதாகவும் சிறப்பான இடவசதியை கொடுக்கும் வகையில் 2880 மிமீ பெற்றிருக்கும்.  இன்டிரியரில் பல நவீன அம்சங்களை கொண்டதாகவும் 24 மணி நேரம் இணையதொடர்பு என பலவற்றை பெற்றுருக்கும்.

மேலும் வோக்ஸ்வேகன் ஐடி கான்செப்ட் கார் மின்சாரத்தில் இயங்கும் காராக மட்டுமல்லாமல் தன்னாட்சியாக செயல்படும் ஆட்டோமேட்டிக் காராகவும் விளங்கும் வகையில் இதன் வடிவ தாத்பரியங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரைவிங் மோட் தேவைப்படாத சமயங்களில் பிரேக் அல்லது ஆக்சிலேரேட்டர் பெடல்களை அழுத்தினால் தானாகேவே மெனுவல் டிரைவிங் முறைக்கு மாறிக்கொள்ளும்.

2020 ஆம் ஆண்டு முதல் வோக்ஸ்வேகன் ஐடி மின்சார கார் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்கள் முழுபயன்பாட்டுக்கு வரும் என வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.