ஹீரோ டான் 125 பைக் அறிமுகம் – இஐசிஎம்ஏ 2016

0

ஆப்பரிக்கா சந்தைக்கான ஹீரோ டான் 125 பைக் மாடலை இத்தாலியில் நடைபெற்று வரும் மிலன் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

டான் 125 பைக்கில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் , நீளம் மற்றும் அகலத்தை கொண்ட இருக்கையாக விளங்கும்.  9 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி 4 ஸ்டோரக் ஏர் கூல்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.35 நியூட்டன் மீட்டர் ஆகும்.  மிக் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிக சிறப்பான நீடித்த தயாரிப்பு மாடலாக விளங்க உள்ள ஹீரோ டான் 125 பைக் ஆப்பரிக்கா சந்தையில் வளர்ந்து வரும் வர்த்தக ரீதியான மோட்டார்சைக்கிள் டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும் என தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் டான் 125 விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஆப்பரிக்காவில் கென்யா , உகாண்டா, எத்தியோப்பியா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் மேலும் பல ஆப்பரிக்கா நாடுகளில் சிறப்பான வரவேற்பினை பெறும் மாடலாக விளங்கும்.