2017 யமஹா ஆர்6 டீஸர் வெளியீடு – இன்டர்மோட் ஷோ 2016

வருகின்ற 2016 இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் ஷோ அரங்கில் 2017 யமஹா YZF-R6 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. 2017 யமஹா ஆர்6 பைக் டீஸரை யமஹா ஆர் வோர்ல்டு என சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

நடுத்தர ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளான யமஹா ஆர்6 பைக்கின் இன்ஜின் யூரோ VI மாசுகட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் மிக சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய செயல் திறன் மிக்க மாடலாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஆர் வோல்டு வரிசையில் டீஸர் வெளியிடப்பட்டுள்ள ஆர்6 பைக்கில் பல நவீன எலக்டரானிக் வசதிகள் , டிரைவிங் மோட்கள் போன்றவை இடம் பெற்றிருக்கலாம்.

புதிய தலைமுறை ஆர்1 பைக்கின் தாத்பரியங்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் புதிய டிசைன் தாத்பரிங்களுடன் வரவுள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோ வாயிலாக புகைப்போக்கி சப்தம் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ரகமாக ஆர்6 விளங்கும் என தெரிகின்றது.

2016 இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் ஷோ அரங்கின் வாயிலாக வெளியிடப்பட்ட உள்ள யமஹா YZF-R6 பைக்கின் விபரங்கள் அக்டோபர் 4ந் தேதி வெளியாகும் என யமஹா தெரிவித்துள்ளது.