2018 வால்வோ XC60 எஸ்யூவி டீஸர் – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ

87-வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 2018 வால்வோ XC60 எஸ்யூவி காரின் டீஸர் படத்தை வால்வோ வெளியிட்டுள்ளது. புதிய எக்சி60 காரில் கூடுதலான வசதிகளுடன் புதிய இன்ஜினை பெற்றிருக்கும்.

2018 Volvo XC60 teaser image

2018 வால்வோ XC60

வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் வால்வோ வெளியிட்டுள்ள எக்ஸ்சி60 ஸ்யூவி  டீசர் பற்றி பார்க்கலாம்.

எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள எக்சி60 காரின் புதிய வடிவ தாத்பரியங்கள் விற்பனையில் உள்ள எக்ஸ்சி90 காரின் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வால்வோ பாரம்பரிய கருப்பு வண்ண வலை போன்ற கிரிலுடன் தோர் சுத்தியில் வடிவிலான எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கை பெற்று விளங்குகின்றது.

வால்வோ நிறுவனத்தின் எஸ்பிஏ  (SPA -Scalable Product Architecture) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள புதிய எக்ஸ்சி90 மாடலில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் வரலாம். மேலும் பிளக் இன் ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

volvoXC60 1

ஸ்வீடன் நாட்டில் நடைபெற உள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் 2018 வால்வோ XC60 மாடலின் தகவல் முழுமையாக வெளிவரும் இணைந்திருங்கள்..