சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ

0

2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் ஏஎமடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் காட்சிக்கு வெளியிடப்பட்டுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாகும்.

maruti-vitara-brezza

 

4 மீட்டருக்கு குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் 89 hp ஆற்றலை வெளிப்படுத்தும் விட்டாரா பிரெஸ்ஸா 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் மாடலில் ஏஎம்டி (AGS- Auto Gear shift) மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ மாடல் மட்டுமே விற்பனையில் உள்ள நிலையில் கூடுதலாக ஏஎம்டி மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம். மேலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனும் இடம்பெற உள்ளது.

மிக அதிகப்படியான முன்பதிவுகளை பெற்றுள்ள பிரெஸ்ஸா கார் 6 முதல் 9 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. க்ரெட்டா , டியூவி300 , ஈகோஸ்போர்ட் போன்ற பிரசத்தி பெற்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தோனேசியா சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

maruti vitara brezza photo gallery

[envira-gallery id=”5777″]