Automobile Tamilan

1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

1000 கிலோ எடை அதிகபட்சமாக 1000 குதிரைகளுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் பொது போக்குவரத்து சாலைகளில் இயங்கும் வகையில் ஃபார்முலா 1 பந்தய கார் நுட்பங்களை பெற்றதாகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

மிகவும் வேகமாகவும் நவீன அம்சங்களை பெற்ற பந்தய கார்களில் பயன்படுத்தப்பட்டும் அத நவீன நுட்பங்களை பொது போக்குவரத்து சாலைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் ஸ்போர்ட்டிவ் காரில் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் கொண்டதாக வந்துள்ளது.

ரேஸ் கார்களை சாலையில் இயக்குவதற்கான நுட்பங்களை பெற்ற கார் ப்ராஜெக்ட் ஒன் 0 முதல் 200 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும், இந்த மாடலின் அதிகபட்சமாக 350 கிமீ வேகத்தை எட்டும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

மின்சார மோட்டார்கள் மற்றும் 1.6 லிட்டர் எஞ்சின் ஆகியவை இணைந்து 1000 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன் கார்பன் ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் ஸ்டீயரிங் வீல் சதுர வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 275 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள ப்ராஜெக்ட் ஒன் கார்கள் விற்று தீர்ந்து விட்டது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன் காரின் இந்திய மதிப்பு ரூ. 17.64 கோடி ஆகும்.

Exit mobile version