ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் – EICMA 2017

0

Royal Enfield Continental GT 650 and interceptorசென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் ஆகிய இரு மோட்டார் சைக்கிள் மாடல்களை இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்

Royal Enfield Interceptor 650 twins

Google News

 

650சிசி பெற்ற இரு மாடல்களும் ஒரே சேஸீஸ்களை பகிர்ந்து கொண்டு 650 சிசி எஞ்சின் பெற்றதாக தோற்ற அமைப்பில் மட்டும் சில மாறுதல்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

Royal Enfield Continental GT 650 twin

 

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
பவர் 47 bhp at 7,100 rpm
டார்க் 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்
எரிபொருள் வகை Fuel Injection
இக்னிஷன் Digital Spark Ignition – TCI

 

இங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் இணைந்து உருவாக்கப்பட்ட சேஸீ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் கேஸ் நிரம்பிய ட்வீன் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

மேலும் இரு மாடல்களிலும் முன் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ள இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன்

Royal Enfield Interceptor Orange

பாரம்பரிய ரோட்ஸ்டெர் பைக்குகளின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட இன்டர்செப்டார் 650 ட்வீன் மோட்டார்சைக்கிள் மிக சிறப்பான வகையில் நெடுஞ்சாலையில் பயணிக்க ஏற்றதாக அமைந்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்டர்செப்டார் 650 ட்வீன் ஆரஞ்சு, சில்வர் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.

Royal Enfield Interceptor Sliver Spectre Royal Enfield Interceptor Ravishing Red

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன்

 

Royal Enfield Continental GT 650

கஃபே ரேசர் எனப்படும் ஸ்டைல் அம்சங்களை பெற்ற கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் மாடல் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை வெளிப்படுத்துகின்றது.

கான்டினென்டினல் ஜிடி 650 கருப்பு, ஐஷ் க்வின் மற்றும் சீ நிம்ப் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.

Royal Enfield Continental GT 650 Black Royal Enfield Continental GT 650 see