புதிய ஹோண்டா CBR 150R இந்தியா வருமா ?

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிய ஹோண்டா CBR 150R பைக் இந்தோனேசியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் விற்பனையில் உள்ள CBR 150R பைக்கை விட இரண்டு  முறை ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2016-honda-cbr-150r-side

தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள மாடல் ஸ்டிக்கரிங் மட்டும் கலர் டோன் மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடல் இது இரண்டாவது முறையாக மேம்படுத்தப்பட்டிருப்பதனால் இதே மாடல் இந்திய சந்தைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது.

மிகவும் ஸ்டைலிசான இரட்டை பிரிவு எல்இடி முகப்பு விளக்குகளுடன் நேர்த்தியான கட்டுமானத்துடன் விளங்கும் புதிய மாடலில் பல நவீன அம்சங்கள் எல்இடி டெயில் மற்றும் எல்இடி இன்டிகேட்டர் போன்வற்றை பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஸ்பீளிட் இருக்கைகள் , புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் ,டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மேலும் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ் பெற்றுள்ளது.

சிபிஆர் 150ஆர் பைக்கில் FI ஆப்ஷனுடன் விளங்கும் 149.16 cc  லிக்யூடூ கூல்டு இசியூ என்ஜின் ஆற்றல் 17.1 PS மற்ற்ம் 13.6 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோ ஜிபி சிறப்பு எடிசனான ரெப்சால் எடிசனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை , சிவப்பு , கருப்பு மற்றும் மோட்டோ ஜிபி ரெப்சால் எடிசன் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றது.

இந்தேனசியா விலை IDR 32.5 மில்லியன் முதல் IDR 33.3 மில்லியன் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய விலைப்படி ஹோண்டா CBR 150R பைக் விலை ரூ. 1.60 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை ஆகும்.  இந்திய சந்தைக்கு புதிய ஹோண்டா சிபிஆர் 150ஆர் அடுத்த சில மாதங்களில் வரலாம்.

[envira-gallery id="7111"]