இந்தியாவில் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

0

vespa red launchedஎய்ட்ஸ் விழிப்புணர்வு ரெட் அமைப்பின் ஆதரவுடன் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா பிராண்டில் உள்ள வெஸ்பா 125 ஸ்கூட்டர் அடிப்படையில் ரூ.87,009 விலையில் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

வெஸ்பா ரெட் ஸ்கூட்டர்

vespa red scooter launched in india

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஒவ்வொரு வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் வாயிலாக ரூ.3250 ($ 50) வரை சர்வதேச அளவிலான எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இருப்பு தொகையில் சேமிக்கப்பட்டு இந்தியாவில் எய்ட்ஸ் நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி செயல்படுத்தப்பட உள்ளது.

ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பாளர்களில் முதன்முறையாக ரெட் அமைப்புடன் இணைந்து செயல்படும் முதல் நிறுவனமாக வெஸ்பா விளங்குகின்றது. இந்தியாவில் வெஸ்பா பிராண்டில் விற்பனையில் உள்ள 125VXL மாடலில் சிறப்பு சிவப்பு நிறம் இணைக்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக  12 அங்குல சிவப்பு அலாய் வீல் மற்றும் லெதர் இருக்கைகளை கொண்டுள்ளது.

எஞ்சின் ஆற்றலில் மாற்றமில்லாமல், முந்தைய  10.1hp குதிரை திறன் மற்றும் 10.6Nm டார்க் வழங்கும் 125சிசி எஞ்சினை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

vespa red

இந்தியாவில் உள்ள வெஸ்பா டீலர்கள் மற்றும் பியாஜியோ மோட்டோபிளக்ஸ் ஷோரூம்களில் கிடைக்க உள்ள வெஸ்பா ரெட் ஸ்கூட்டரின் முதல் வாடிக்கையாளராக நடிகர் ஃபர்கான் அக்தர் விளங்குகிறார்.

வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் விலை ரூ.87,009 (எக்ஸ்-ஷோரூம் மும்பை)