கோவையில் களமிறங்கும் ஏத்தர் 450x மின்சார ஸ்கூட்டர்

Ather 450X-e scooter

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய 450x ஸ்கூட்டருக்கு நாடு முழுவதும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில மாதங்களுக்குள் கோயம்புத்தூர், அகமதாபாத், கொச்சி, மற்றும் கொல்கத்தா நகரங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இதுவரை சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் கிடைத்த வந்த ஏத்தர் இப்போது டெல்லி என்சிஆர், மும்பை, புனே மற்றும் ஹைத்திராபாத் நகர்ங்களில் துவங்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் அடுத்த நான்கு நகரங்களில் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் இந்நிறுவனத்தின் டீலர்களுக்கான விண்ணப்பம் 2000க்கும் கூடுதலாக பெற்றுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 நகரங்களிலும், 2023 ஆம் ஆண்டிற்குள் 30 நகரங்களில் விரிவுப்படுத்த இலக்கு வைத்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட புதிய ஸ்கூட்டர் முன்னணி மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் முன்பதிவு பெற்றுள்ளதாக ஏத்தர் குறிப்பிட்டுள்ளது. ஆனால் முன்பதிவு எண்ணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.

நிகழ்நேரத்தில் 85 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற  450 எக்ஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 6 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 108 கிலோ கிராம் எடை கொண்ட 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 0- 40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.29 விநாடிகளும், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.50 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டரை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.

450X ஸ்கூட்டரில் உள்ள பெரிய லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் செய்ய இப்போது 3 மணிநேரம் 35 நிமிடங்கள் 80 சதவிகிதத்தையும் அதுவே, 5 மணிநேர 45 நிமிடங்களையும் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் பெறுவதற்கு தேவைப்படுகின்றது.

Ather-450X-e-scooter

ஏத்தர் 450 எக்ஸ் விலை ரூ.99,000 (எக்ஸ்ஷோரூம்) ஆகும். நீங்கள் வாங்கும் முறையில் மாதந்தோறும் சந்தா கட்டணமாக பிளஸ் வேரியண்டிற்கு ரூ.1,699 மற்றும் ப்ரோ வேரியண்டிற்கு ரூ.1,999 செலுத்த வேண்டும். இந்த இரு திட்டங்களிலும் வரம்பற்ற பேட்டரி வாரண்டி வழங்கப்படுகின்றது.

அல்லது

450 எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.49 லட்சம் மற்றும் 450 எக்ஸ் ப்ரோவின் விலை ரூ.1.59 லட்சம் ஆகும். (எக்ஸ்ஷோரூம் விலை) இந்த பிளானை பொறுத்த வரை மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது. மூன்று வருடம் மட்டுமே பேட்டரி வாரண்டி வழங்கப்படும். ஆனால் ஏதெர் கனெக்ட் எனப்படுகின்ற OTA மேம்பாடு, இலவச ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு கட்டணமாக ரூ.2500 வசூலிக்கப்படுகின்றது. இந்த கட்டணம் முழுமையாக திரும்ப பெறக்கூடியதாகும்.