இந்தியாவில் சிஎஃப் மோட்டோ 650GT விற்பனைக்கு வெளியானது

0

 

cfnoto 650gt

Google News

இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ள சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின், 650GT  பைக் மிகவும் ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் டூரர் மாடலாக ரூபாய் 5.49 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

1989 ஆம் ஆண்டு சீனாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட சிஎஃப்மோட்டோ நிறுவனம், இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் 300NK மாடல் உட்பட 650சிசி என்ஜின் கொண்ட 3 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் பிரபலமான 2017, ஸ்போர்டிவ் பைக் உற்பத்தியாளர் கேடிஎம் தனது மோட்டார் சைக்கிள்களை சீனாவிலும் பிற பகுதிகளிலும் விற்க சி.எஃப் மோட்டோவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் டிசைன் ஹவுஸ் கிஸ்கா நுட்பங்களை அனுகும் திறனை பெற்றே இந்நிறுவன மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

650சிசி என்ஜின் கொண்ட மாடல்களில், பொதுவாக  649.3cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 60.3 பிஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 56 என்எம் முறுக்குவிசையை  வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான ஸ்போர்ட்டிவ் டூரிங் ரக 650GT மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட் , டெயில் லைட், டிஜிட்டல் அம்சத்தை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை கொண்டதாக அமைந்துள்ளது.

முன்புறத்தில் ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் டிஸ்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. 650ஜிடி மாடலில் ஆகியவற்றுடன் யூஎஸ்டி ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்றுள்ளது.

ஆண்டுக்கு 10,000 இரு சக்கர வாகனங்களை ஒருங்கிணைக்க ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிஎஃப் மோட்டோ தனது 650GT பைக் அறிமுக விலையை ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளது. ஹைத்திராபாத், பெங்களூர், மும்பை, புனே,டெல்லி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் AMW டீலர்ஷிப்கள் தொடங்கப்பட உள்ளது.

சிஎஃப் மோட்டோ 300NK Rs. 2.29 லட்சம்

சிஎஃப் மோட்டோ  650MT Rs. 4.99 லட்சம்

சிஎஃப் மோட்டோ 650NK ரூ. 3.99 லட்சம்

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

cfmoto 650gt bike