சீனாவை தலைமையிடமாக கொண்ட சிஎஃப் மோட்டோ நிறுவனம், ஜூலை 4 ஆம் தேதி வெளியிடயிருந்த தனது மோட்டார்சைக்கிள்களை மும்பையில் வெளியிடயிருந்த நிலையில் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதி பெங்களூருவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து களமிறங்கியுள்ள சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் பெங்களூருவில் உள்ள ஏஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக வரவுள்ள சிஎஃப் மோட்டோ 300 NK பைக்கில் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமபாக 34 ஹெச்பி குதிரை சக்தி, மற்றும் 20.5 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் TFT முறையிலான டிஸ்பிளே அம்சம் மூலம் ஸ்மார்ட்போன் வாயிலாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றிருக்கும்.
650NK, 650MT மற்றும் 650GT என மூன்று பைக்குகளிலும் 649சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 650NK என்ஜின் அதிகபட்சமபாக 61 ஹெச்பி பவர், மற்றும் 56 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் TFT டிஸ்பிளே அம்சம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருக்கும்.
650MT பைக் மாடல் அதிகபட்சமபாக 71 ஹெச்பி பவர், மற்றும் 56 என்எம் டார்க் வெளிப்படுத்தும். சிஎஃப் மோட்டோ 300NK பைக் விலை ரூபாய் 2 லட்சத்திற்குள் வெளியாகும். அடுத்தப்படியாக மற்ற மூன்று மாடல்களும் ரூபாய் 3.50 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.