சிஎஃப் மோட்டோ மற்றும் ஏஎம்டபிள்யூ நிறுவனமும் இணைந்து 300NK பைக் மாடலை ரூபாய் 2.29 லட்சம் அறிமுக விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்டீரிட் ஃபைட்டர் 300 என்கே மாடலில் 33.5bhp பவரை வெளிப்படுத்தும் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு சீனாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கபட்ட சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள ஏஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் நான்கு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் பிரபலமான 2017, ஸ்போர்டிவ் பைக் உற்பத்தியாளர் கேடிஎம் தனது மோட்டார் சைக்கிள்களை சீனாவிலும் பிற பகுதிகளிலும் விற்க சி.எஃப் மோட்டோவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் டிசைன் ஹவுஸ் கிஸ்கா நுட்பங்களை அனுகும் திறனை பெற்றே இந்நிறுவன மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் குறைந்த விலை மாடலாக வெளியிடப்பட்டுள்ள சிஎஃப் மோட்டோ 300NK பைக்கில் 292 சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 33.5 பிஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 20.5 என்எம் முறுக்குவிசையை வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தை வழங்குகின்ற இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் பெட்ரோல் டேங்க் மற்றும் அதன் எக்ஸ்டென்ஷன் கொண்டுள்ளது. TFT டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கன்சோல், ஸ்பிளிட் இருக்கை, எல்இடி டெயில் லைட் போன்றவற்றை கொண்டுள்ளது.
முன்புறத்தில் இன்வெர்டேட் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் உடன் இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
12.5 லிட்டர் பெட்ரோல் கலன் கொண்ட இந்த பைக்கின் எடை 151 கிலோ கிராம் ஆகும். இந்தியாவில் தனது முதல் நான்கு மாடலை வெளியிட்டுள்ள சிஎஃப் மோட்டோ தனது 300NK பைக் அறிமுக விலையை ரூ.2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளது. ஹைத்திராபாத், பெங்களூர், மும்பை, புனே,டெல்லி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் AMW டீலர்ஷிப்கள் தொடங்கப்பட உள்ளது.
சிஎஃப் மோட்டோ 650NK Rs. 3.99 லட்சம்
சிஎஃப் மோட்டோ 650MT Rs. 4.99 லட்சம்
சிஎஃப் மோட்டோ 650GT ரூ. 5.49 லட்சம்
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.