சிஎஃப் மோட்டோ பைக் நிறுவன முதல் டீலர் துவக்கம்

0

சிஎஃப் மோட்டோ

சீனாவை தலைமையிடமாக கொண்ட சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து தனது நான்கு பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்ட நிலையில், தற்போது வரை 700 க்கு அதிகமான முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன், அடுத்த 12 மாதங்களில் 50 டீலர்களை நாடு முழுவதும் துவங்க திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தையில் இந்நிறுவனம் 300NK, 650NK, 650MT மற்றும் 650GT போன்ற மாடல்களுக்கு ரூ.5,000 முன்பதிவு கட்டணமாக வசூலித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு நடைபெறுகின்றது. மேலும் மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் இந்நிறுவனம் டீலரை துவங்கவுள்ளது.

சி.எஃப் மோட்டோ மோட்டார் சைக்கிள்கள் சி.கே.டி முறை வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பெங்களூரில் உள்ள ஏ.எம்.டபிள்யூ ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலைக்கு மாதம் 1500 யூனிட் உற்பத்தி திறன் கொண்டதாக உள்ள நிலை தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கவும் இயலும். மேலும், இந்நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் 50 % பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் 250சிசி என்ஜின் பெற்ற 250 SR ஃபேரிங் பைக்கினை விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.

சிஎஃப் மோட்டோ 300NK Rs. 2.29 லட்சம்

சிஎஃப் மோட்டோ  650NK Rs. 3.99 லட்சம்

சிஎஃப் மோட்டோ  650MT Rs. 4.99 லட்சம்

சிஎஃப் மோட்டோ 650GT ரூ. 5.49 லட்சம்

மேலும் படிங்க- சிஎஃப் மோட்டோ பைக்குகளின் விலை மற்றும் சிறப்புகள்