ஹீரோவின் அடுத்த பைக் ஹண்டர் என பெயரிடப்பட்டுள்ளது.!

0

hero hunter

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், அடுத்து வரவிருக்கும் பைக் மாடலுக்கு ஹீரோ ஹண்டர் என பெயரிடப்பட்டுள்ளது. அனேகமாக இந்த மாடல் 110 அல்லது 125சிசி சந்தைக்கு ஏற்றதாக முற்றிலும் புதிய பைக் மாடலாக விளங்க உள்ளது.

காப்புரிமை கோரி ஹீரோ விண்ணப்பித்துள்ள புதிய பைக் மாடலின் பெட்ரோல் டேங்க், வட்ட வடிவ ஹெட்லைட், மற்றும் வைசர் போன்றவற்றின் பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த மாடலில் இடம்பெற உள்ள என்ஜின் மற்றும் அறிமுக விவரம் போன்ற எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

கம்யூட்டர் ரக மாடலுக்கு இணையான தோற்ற பொலிவினை வழங்கவல்லதாக டேங்க் காட்சியளிப்பதனால் 110சிசி அல்லது 125சிசி இவையிரண்டும் அல்லாமல் ஒருவேளை ஹீரோ பெரிதும் சோபிக்காத 150சிசி சந்தையாக இருப்பதற்க்கும் வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் ஹீரோ நிறுவனம் பிரீமியம் சந்தையில் நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R, எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200T போன்ற மாடல்கள் 200சிசி சந்தையை ஆக்கிரமித்துள்ளது.

ஹீரோ ஹண்டர் பைக் தொடர்பான மேலதிக விபரங்கள் இனி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

hero hunter bikeimage source -gaadiwaadi