ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S, எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை உயர்ந்தது

0

hero xtreme 200s

ஃபேரிங் ரக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S மற்றும் நேக்டூ ஸ்டைல் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R என இரு மாடல்களின் விலையை ரூபாய் 1000 வரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உயர்த்தியுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் விற்பனைக்கு அறிமுகமானது முதல் இதுவரை இரு முறை விலை உயரத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200 மாடல்களில் ஒரே மாதிரியான பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில்  கார்புரேட்டர் கொண்ட 199.6 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.4 பிஹெச்பி குதிரைத் திறன் மற்றும் 17.1 என்எம் முறுக்குவிசை வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், அற்புதமான ஏரோடைனமிக்ஸ் அம்சத்தை பெற்ற ஃபேரிங் பேனல்கள் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் கொண்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக காட்சியளிக்கின்றது.

37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 ஸ்டெப் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் 17 அங்குல வீல் கொண்டு  276 mm டிஸ்க் முன்புறத்தில்,  220 mm டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

hero xtreme 200r

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 விலை பட்டியல்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S – ரூ.1,00,300

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R -ரூ.91,900

[தமிழக விற்பனையக விலை]

இந்த பைக்குடன் வெளியிடப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T, எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளின் விலை தற்போது வரை உயர்த்தப்படவில்லை.