அமோக வரவேற்பை பெறும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக்கின் சிறப்புகள்

எக்ஸ்டீரிம் 200எஸ்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக் அமோகமான வரவேற்பினை பெற்று வருவதாக டீலர்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக எக்ஸ்பல்ஸ் 200 வரிசை மாடலை விட சிறப்பான வரவேற்பினை பெற்று வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள மூன்று புதிய மாடல்களில் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட மிகவும் ஸ்டைலிஷான பைக் மாடலாக விளங்குகின்றது. போட்டியாளர்களை விட குறைவான விலையில் அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S

விற்பனைக்கு கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக அமைந்துள்ளது.

பொதுவாக எக்ஸ்ட்ரீம் 200ஆர், எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் போன்ற மாடலில் ஒரே என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும்  17.1 Nm முறுக்குவிசை திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

Xtreme-200S

ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிரிப்மீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், சர்வீஸ் இன்டரவெல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 வழி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17 அங்குல வீல் கொண்டு  276 மிமீ டிஸ்க் முன்புறத்தில்,  220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு  சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S பைக் விலை ரூ.99,300 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

Xtreme 200S Xtreme-200S Xtreme 200S