புதிய ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது

முந்தைய ஹோண்டா 150 என்ஜினுக்கு மாற்றாக புதிய 160சிசி பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஹோண்டா யூனிகார்ன் பைக் ரூ.93,593 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களில் எந்த மாறுதல்களும் இல்லை.

முந்தைய மாடலை விட மிக சிறப்பான வகையில் மேம்பட்ட புதிய என்ஜினாக 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு PGM-FI HET (Honda Eco Technology) நுட்பத்தினை கொண்டுள்ளது. 162.7 சிசி என்ஜின் அதிகபட்சமாக 12.73 bhp பவர், 14 NM டார்க் வழங்குகின்றது. முன்பாக பிஎஸ்4 மாடலின் டார்க் 12.8 என்எம் ஆக இருந்தது. இந்த மாடல் விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 மாடலை விட 8 மிமீ கூடுதலான கிரவுண்ட் கிளியரண்ஸ், 24 மிமீ கூடுதல் இருக்கை நீளத்தைப் பெற்றதாகவும், மற்றபடி இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் சுவிட்ச் பெற்றுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஒற்றை மோனோஷாக் அப்சார்பர், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இணைந்துள்ளது.

முந்தைய பிஎஸ் 4 மாடலை விட ரூ.12,500 வரை விலை உயர்த்தப்பட்டு இப்போது புதிய ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 விலை ரூ.93,593 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version