ரூ.5,000 வரை ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக் விலை உயர்ந்தது

0

rv400 e-bike

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 என்ற இரு எலக்ட்ரிக் பைக்குகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்வி400 பைக்கின் விலை ரூ.5,000 உயர்த்தப்பட்டு, தற்போது எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.03 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வி300 பைக் விலை உயர்த்தப்படவில்லை.

Google News

குறிப்பாக நாளை அகமதாபாத் , மார்ச் 3 ஆம் தேதி ஹைத்திராபாத் மற்றும் சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக கட்டணத்தை செலுத்தி வாங்குவோருக்கு எக்ஸ்ஷோரூம் விலையில் ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மை ரிவோல்ட் பிளானில் வாங்குவோருக்கு கூடுதலாக ஒரு மாதம் இஎம்ஐ செலுத்த வேண்டும். அதாவது, முன்பாக 37 மாதங்களாக இருந்த நிலையில் இனி 38 மாதங்களாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் காத்திருப்பு காலம் இப்போது 90 நாட்களாக குறைந்துள்ளது. முன்பு இது 5 மாதங்களாக இருந்தது.

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 36 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 38 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 38 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் வேரியண்டில் கூடுதலாக இலவசமாக முதல் மூன்று வருடங்களில் டயர் மட்டும் ஒரு முறை மாற்றித் தரப்படலாம்.