ரூ. 2.40 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் வெளியானது

0

இந்தியாவில் 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிஷன் ஜூலை 10ந் தேதி என்ஃபீல்டு அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் எடிஷன்

இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து வான் படையினர் பயன்படுத்திய 59 கிலோ எடை கொண்ட ராயல் என்ஃபீல்ட் WD/RE ஃபிளையிங் ஃபீலா 125 மோட்டார்சைக்கிள் உந்துதலில் மற்றும் கிரேக்க புராணக் கதைகளில் வீராதி வீரனான பெல்லரோபான் பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாக பயன்படுத்தப்பட்டுள்ள கிளாசிக் 500 பெகாசஸ் இந்தியா உட்பட சர்வதேச அளவில் சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலிவ் டிராப் க்ரீன் ஆகிய இரு நிறங்களில் விற்பனை செயப்பட உள்ளது.

Google News

இந்தியாவில் ஆலிவ் டிராப் க்ரீன் நிறம் விற்பனைக்கு அனுமதியில்லை என்பதனால், சர்வீஸ் பிரவுன் நிறத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

தோற்ற அமைப்பில் கிளாசிக் 500 மாடலின் அம்சத்தை பெற்றிருந்தாலும் பெட்ரோல் டேங்கில் மரூன் மற்றும் நீல நிறத்திலான பெகாசஸ் , கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள் மற்றும் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட்டுகள் மற்றும் பெட்ரோல் டேங்கிலும் தயாரிப்பு அடிப்படையில் தனித்துவமான வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்போக்கி, எஞ்சின், கைப்பிடி, கீக் ஸ்டார்ட் பெடல், ஹெட்லைட் பெசல் ஆகியவற்றில் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

 

194 கிலோ எடை கொண்ட என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 27.2  பிஹெச்பி ஆற்றல் மற்றும் 41.3 என்எம் இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு கிளாசிக் 500 பெகாசஸ் , சர்வதேச அளவில் 1000 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் இந்தியாவில் மட்டும் 250 எண்ணிக்கையில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த மோட்டார்சைக்கிளில் டேங்கில் இடம்பெற்றுள்ள C50001 முதல்  C51000 வரை உள்ள நம்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளது. இவற்றில் இந்தியாவிற்கு C50001 முதல்  C50250 வரை உள்ள நம்பர்கள் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து சந்தையில் 190 வாகனங்களும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 560 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் ஜூலை 10ந் தேதி ஆன்லைன் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்டுகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ. 2.40 லட்சம் (ஆன் ரோடு-தமிழ்நாடு) வந்துள்ளது. அதாவது சாதாரண கிளாசிக் 500 மாடலை விட ரூ. 30,000 வரை விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 500 Pegasus Edition image gallery