ரூ.1.68 லட்சம்.., ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 விலை விபரம் கசிந்தது

0

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350

விற்பனையில் கிடைக்கின்ற தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடலின் ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக விலை ரூ.1,68,550 என முதன்முறையாக கசிந்துள்ளது.  இது முந்தைய தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட ரூ. 5,000 வரை மட்டுமே கூடுதலாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google News

எரிபொருள் டேங்கின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், வழக்கமான அதே வட்ட வடிவ ஹெட்லைட் கொண்டு ஸ்பிளிட் இருக்கை, கிராப் ரெயிலுடன் கவர்ச்சிகரமான மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.

2020 Royal Enfield Meteor 350 fireball

சேஸைப் பொறுத்தவரை புதிய டபுள் கார்டில் அமைப்புடையதாக வழங்கப்பட்டு, புத்தம் புதிய 350 சிசி என்ஜினை பெறுகின்றது. இதுவரை பயன்படுத்தப்பட்டு வரும் யூசிஇ என்ஜினுக்கு விடைகொடுக்கப்பட்டு மீட்டியோர் 350 பைக்கில் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி SOHC உடன் வரவுள்ளது. கூடுதலான பவர் மற்றும் டார்க்குடன் சிறப்பான வகையில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு, பெருமளவு மீட்டியோரில் அதிர்வுகள் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் என்ஃபீல்டு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கோவிட்-19 வைரஸ் பரவலுக்குப் பிறகு விற்பனைக்கு அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350
ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக் விலை

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350

image – instagram/automobile infiniti