டுகாட்டி-யை கைபற்ற ராயல் என்ஃபீல்டு அதிரடி

0

royal enfield to buy ducati bikesஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆடி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இத்தாலி டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் கையகப்படுத்த தீவரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

டுகாட்டி-ராயல் என்ஃபீல்டு

ஐஷர் குழுமத்தின் கீழ் செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 350சிசி சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்ற நிறுவனமாக சர்வதேச அளவில் விளங்குகின்றது. சூப்பர் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கு பஜாஜ், ஹீரோ, என்பீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஹோண்டா,ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களும் இந்த போட்டியில் களமிறங்கியதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.

Google News

Ducati Superleggera 1299 superbike

தற்போது ஆசியா அளவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மட்டுமே டுகாட்டி நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்கா டாலர் 1.8 பில்லியன் முதல் 2.0 பில்லியன் வரை மதிப்பில் கையகப்படுத்த நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் பஜாஜ் மிகுந்த ஆர்வமாக இருந்த நிலையில் பஜாஜ்-டிரையம்ப கூட்டணியை தொடர்ந்து இந்த திட்டத்தை பஜாஜ் கிடப்பில் போட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த மாத இறுதிக்குள் டுகாட்டி நிறுவனத்தை வாங்கப்போகும் நிறுவனம் குறித்து அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Ducati Monster 797

Royal Enfield logo