மிக விரைவில் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக் அறிமுகம்

 

இந்தியாவின் விலை குறைந்த ஏபிஎஸ் பிரேக் பெற்ற 150சிசி மாடலாக பிரபலமான சுசூகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற ஜிக்ஸெர் பைக் படம் இணையத்தில் கசிந்துள்ளது.

சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக்

சமீபத்தில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த, சுசூகி GSX-S750 பைக்கினை தொடர்ந்து , சுசூகி வி-ஸ்டோரம் 650 அட்வென்ச்சர் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் தொடக்க சந்தையில் உள்ள ஜிக்ஸெர் நேக்டு பைக் மாடலில் ஏபிஎஸ் பொருத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி 125சிசி க்கு குறைந்த மாடல்களில் சிபிஎஸ் மற்றும் 125சிசி க்கு கூடுதலான திறன் பெற்ற மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் ஆகியவற்றை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து பெரும்பாலான மோட்டார்சைக்கிள் நிறுவனஙகள் ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை இணைக்க தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இணைய உள்ள ஜிக்ஸெர் பைக்கில் முன்புறத்தில் மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் ரியர் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

தற்போது விற்பனையில் உள்ள டிரம் பிரேக் பெற்ற மாடலை விட ரூ.6000 வரை அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதனால் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் ஆரம்ப நிலை மாடல் ரூ. 89,000 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை அமைய வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version