பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் விற்பனைக்கு வெளியானது

0

tvs scooty pep plus bs6

குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் பிளஸ் விலை ரூபாய் 50,950 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு உள்ள பிஎஸ்4 மாடலை விட ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

5 hp குதிரைத்திறன் மற்றும்  5.8Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 87.8 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எடையை பெற்ற ஸ்கூட்டர் மாடலாக 95 கிலோ மட்டும் பெற்றுள்ளது.

சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை டிவிஎஸ் நிறுவனம்  சிங்க்ரோய்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைப்பதுடன் இரு டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது. புதிதாக நீலம் மற்றும் ரெட் மேட் என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் விலை ரூ. 50,950 மற்றும் மேட் எடிஷன் ரூ.51,650 ஆகும்.