பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரூ.52,335 விலையில் துவங்குகின்றது

0

tvs sport bs6 1

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 110சிசி பைக் மாடலான டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு ரூ.52,335 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய கார்புரேட்டர் என்ஜினுக்கு பதிலாக Fi பெற்றதாக வந்துள்ளது.

Google News

முன்பாக 99.7 சிசி என்ஜினை பெற்றிருந்த இந்த பைக்கில் இப்போது 109.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 8.17bhp மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் இந்த மாடல் முந்தைய பிஎஸ்4 பைக்கினை விட 15 சதவீதம் வரை கூடுதலாக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை போன்றே தற்போது வந்துள்ள மாடலின் டிசைன் அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டெட் ஸ்பிரிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110மிமீ வழங்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

tvs sport headlight 1

10 லிட்டர் பெட்ரோல் டேங்கினை கொண்டுள்ள டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் மிகவும் ஸ்டைலிஷான ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லைட், புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது. கருப்பு சிவப்பு, வல்கோனா சிவப்பு, பர்பிள், கிரே மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் விலை ரூ. 52,350 (கிக் ஸ்டார்ட்) மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ரூ. 59,525 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆகும்.