இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

0

bmw i8 touchscreen keyfobபாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம்.

பிஎம்டபிள்யூ கார் கீ

BMW NEW LOGO

Google News

இன்றைய நவீன தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்ற நிலையில், எதற்காக தனியான சாவிகள் கொண்டு காரினை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதனை செயல்படுத்த உள்ளனர்.

வளர்ந்து வரும் நவீன நுட்பங்களில் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் அடிப்படை அங்கமாக மாறி வரும் நிலையில் கார்களுக்கு அடிப்படையாக உள்ள சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக வாகனத்தை திறப்பதற்கு மற்றும் இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ராபர்ட்சன் ராய்ட்ரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் தன்னுடைய மாடல் 3 கார்களில் முற்றிலும் சாவிகளை நீக்கிவிட்டு ப்ளூடூத் LE அல்லது என்எஃப்சி  (NFC-near-field communications) கீ அட்டைகள் வாயிலாக கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.

BMW X5 M Black Fire Edition

மேலும் பெரும்பாலான  ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் தங்களது பிரத்தியேக கார் செயலி வாயிலாக சிரமம் நிறைந்த பார்க்கிங் இடங்களில் கார்களை நிறுத்துவதற்கான வசதியை வழங்கி வருகின்றனர்.

சமீபத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரிமியம் ரக ஐ8 மற்றும் 8 சீரிஸ் ஆகிய மாடல்களுக்கு என பிரத்யேக கருப்பு மற்றும் வெள்ளை கலவை பிஎம்டபிள்யூ லோகோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

new bmw x3 suv