ஃபோக்ஸ்வேகன் வென்டோ ஸ்டைல் அறிமுகம்

0
ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் லிமிடெட் எடிசனை வென்டோ ஸ்டைல் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வென்டோ ஸ்டைல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.

வென்டோ ஸ்டைல் காரில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வென்டோ ஸ்டைல் காரில் உள்ள மாறுதல்கள் குரோம் பூச்சு செய்யப்பட்ட டேஷ்போர்டு, முகப்பு கிரில் குரோம் பூச்சூடன் இருக்கும், புதிய ஆலாய் வீல், டோர்ஸ்ட்ரெப் கார்னிஸ், மிக சொகுசு தன்மை தரக்கூடிய சீட் கவர்கள் என சேர்க்கப்பட்டுள்ளன.

Volkswagen Vento Style Limited Edition

வென்டோ ஸ்டைல் எடிசனில் குரோம் பூச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 153 என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

வென்டோ காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தபட்டிருக்கும். இந்த எஞ்சின் வெளிப்படுத்தும் ஆற்றல் 105 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 250என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

வென்டோ ஸ்டைல் டீசல் கார் விலை ரூ 9.41 இலட்சம்.

வென்டோ ஸ்டைல் பெட்ரோல் கார் விலை ரூ 8.33 லட்சம்.(தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Volkswagen Vento Style Features