ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரூ.7.85 லட்சத்திலான தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ தோற்ற மாற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் பஸாத் தோற்றத்தினை போல மூன்று ஸ்லாட்களை கொண்ட கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்க்கு மத்தியில் ஃபோக்ஸ்வேகன்  இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது.  புதிய முன் மற்றும் பின் பம்பர்கள் , மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்கு , புதிய பனி விளக்குகள் கொண்டுள்ளது.

உட்புறத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட கேபின் கொண்டுள்ளது. டாப் வேரியண்டில் கிளாவ் பாக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

வென்ட்டோ

முந்தைய 103பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.2 லிட்டர் என்ஜின் , 104பிஎச்பி 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 103பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தியுள்ளனர். 5 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG கியர்பாசிலும் கிடைக்கின்றது.

முந்தைய மாடலை விட எரிபொருள் சிக்கனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மைலேஜ் விவரம்

1.6 MPI Petrol – 16.09 km/l
1.2 TSI Petrol AT – 18.19 km/l
1.5 TDI Diesel – 20.4 km/l
1.5 TDI Diesel AT – 21.50 km/l

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ விலை விபரம் (Ex-showroom Delhi)

வென்ட்டோ 1.6 MPI – ரூ. 7.85 – 9.42 லட்சம்
வென்ட்டோ 1.2 TSI – ரூ. 9.87 – 10.62லட்சம்
வென்ட்டோ 1.5 TDI – ரூ. 9.10 – 10.67 லட்சம்
வென்ட்டோ 1.5 TDI AT –ரூ. 11.12 – 11.87 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ
Volkswagen Vento facelift launched