வோக்ஸ்வேகன் ஏமியோ, போலோ காரில் புதிய வேரியன்ட் அறிமுகம்!

வோக்ஸ்வேகன் ஏமியோ மற்றும் போலோ என இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாப் வேரியன்ட் முந்தைய டாப் மாடலை விட ரூ. 26,000 வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வோக்ஸ்வேகன் ஏமியோ

இரு மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட புதிய 16 அங்கு அலாய் வீல் (சாதாரன மாடல் 15 அங்குல வீல் உள்ளது), ரிவர்ஸ் கேமரா  சேர்க்கப்பட்டுள்ளது.

ஏமியோ மற்றும் போலோ என இரண்டிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின்களை பெற்றிருக்கும். 74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் தவிர 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

விற்பனையில் உள்ள டாப் வேரியன்ட் மாடலான ஹைலைன் வேரியன்ட்டை விட கூடுதலான வசதிகளை பெற்றதாக வந்துள்ள ஹைலைன் ப்ளஸ் மாடல் அதிகபட்சமாக ரூ. 26,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும். விலை விபரத்துக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகுங்கள்.

volkswagen ameo dashboard

volkswagen ameo rear