ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜூன் 5யில் விலை பட்டியல்

0

வருகின்ற ஜூன் 5ந் தேதி அமியோ காம்பேக்ட் ரக செடான் காரின் விலை விபரம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமியோ காரின் தொடக்க விலை ரூ.5.50 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

volkswagen-ameo-front

Google News

கடந்த வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் சக்கன் ஆலையில் அமியோ காரின உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின்களிலும் வரவுள்ள அமியோ காரில் டிரென்ட்லைன் , கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் என மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ளது.

காம்பேக்ட் ரக செடான் பிரிவில் விற்பனையில் உள்ள ஃபிகோ ஆஸ்பயர் , மாருதி டிசையர் , டாடா ஸெஸ்ட் , ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வல்ல மாடலாக அமியோ அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின்களை பெற்றிருக்கும். 74 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 112 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் தவிர 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

volkswagen-ameo-dashboard

அமியோ காரில் முதன்முறையாக பல புதிய வசதிகளை காம்பேக்ட் ரக செடான் செக்மென்ட்டில்  தானியங்கி மழை சென்ஸார் , க்ரூஸ் கன்ட்ரோல் , ஆன்டி பிஞ்ச் பவர் வின்டோஸ் , ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் கதவுகள் , போன்றவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஏபிஎஸ் அனைத்து வேரியண்டிலும் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 5 , 2016 யில் ஃபோக்ஸ்வேகன் அமியோ விலை பட்டியல் வெளியிட உள்ள நிலையில் ஃபோக்ஸ்வேகன் பேஸ்புக் பக்கத்தில் தொடக்க விலை ஊகத்தினை சரியாக கனிப்பவர்களுக்கு ‘Guess the Price’ என்ற பெயரில் போட்டியை தொடங்கி உள்ளது.

[envira-gallery id=”7381″]