2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்…!

42 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்ற ஃபோக்ஸ்வேன் போலோ காரின் 6 வது தலைமுறை 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய போலோ கார் அற்புதமான டிசைனுடன் அசத்தலான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.

 2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார்

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக செயல்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய போலோ முந்தைய காரை விட கூடுதலான அளவுகள் மற்றும் வசதிகளுடன் ஸ்டைலிசாக வந்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள கார் 8 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட மாடலாகும்.

டிசைன்

முந்தைய PQ25 பிளாட்ஃபாரத்தலிருந்து மாறுபட்டு ஃபோக்ஸ்வேகனின் MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய போலோ கார் சக்திவாய்ந்த ஜிடிஐ , ஸ்போர்ட்டிவ் ஆர்-லைன் மற்றும் சாதாரன போலோ என மூன்றிலுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய போலோ கார் 4053 மிமீ நீளமும், 1446 மிமீ உயரமும் மற்றும் 1751 மிமீ அகலமும் கொண்டதாகும்.இதன் வீல் பேஸ் 2564 மிமீ ஆகும். இது முந்தைய மாடலுடன் ஒப்பீடுகையில் 81மிமீ நீளமாகவும், 63 மிமீ அகலமாகவும், 7 மிமீ உநரம் குறைவாகவும் மற்றும் 94 மிமீ வரை வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலிசான அமைப்புடன் வந்துள்ள புதிய போலோவில் பக்கவாட்டு தோற்ற அமைப்பில் கைப்படிக்கு மேலாக புதிதாக ஒரு லைன் போன்ற டிசைனிங் செய்துள்ளனர். முகப்பில் நேர்த்தியான முகப்பு விளக்குடன் அமைந்துள்ள மாடலில் பின்புற அமைப்பிலும் எல்இடி டெயில் விளக்குகளை வழங்கியுள்ளது.  சாதரன மாடலில் 16 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு பெர்ஃபாமென்ஸ் ரக மாடலில் 17 அங்குல அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர் அமைப்பில் மிக நேர்த்தியாக முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டேஸ்போர்டுடன் அகலமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. ஃபோக்ஸ்வேகறன் ஏக்டிவ் இன்ஃபோ டிஸ்பிளே வயர்லெஸ் சார்ஜ், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன், பின்புற டிராஃபிக் அலர்ட் என பல்வேறு விதமான வசதிகளுடன் கிடைக்க உள்ளது.

பாதுகாப்பு அமைப்பில் சிட்டி எமெர்ஜென்சி பிரேக்கிங், ஸ்பீட் மானிட்டர், பாதசாரிகள் அறிய உதவும் அமைப்பு போன்றவற்றை பெற்றுள்ளது.

எஞ்சின்

சர்வதேச அளவில் 2018 போலோ காரில் 9 வகையாக ஆற்றல் மாறுபாட்டில் கிடைக்கின்றது.அவற்றில் 1.0 லிட்டர், 1.5 லிட்டர், மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் போன்றவற்றுடன் மற்றும் 1.0 லிட்டர் டிஜிஐ எஞ்சினையும் கொண்டுள்ளது.

வருகை

சர்வதேச அளவில் ஃபிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோ அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ள 2018 போலோ கார் இந்திய சந்தையில் சில மாற்றங்களுடன் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுமையான படத்தொகுப்பை காண – > 2018 VW polo Image Gallery

Recommended For You