அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின், 2019 மாருதி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. மாருதி நெக்ஸா டீலர் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

2019 மாருதி பலேனோ கார்

மாருதியின் நெக்ஸா டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட முன்புற பம்பருடன் மிக அகலமான ஏர்டேம் பெற்றதாக பனி விளக்கு செங்குத்தாக வழங்கப்பட்டுள்ளது. கிரில் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு ஹெச்ஐடி ஹெட்லைட்டுக்கு மாற்றாக எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட வடிவத்தை பெற்ற 16 அங்குல அலாய் வீல், பின்புற பம்பர் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இன்டிரியரில் இருக்கை, டேஸ்போர்டு, டோர் பேடுகள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேகன்ஆர் காரில் இடம்பெற்றிருந்த மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று விளங்கலாம்.

83 bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வினில் பெறலாம். 74 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190 NM மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இது தவிர பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலில் 101 hp பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் மாடலும் கிடைக்கின்றது. ஆனால் பலேனோ ஆர்எஸ் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை.

image source: team-bhp

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வரவுள்ள டாடா 45X ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள 2019 மாருதி பலேனோ ஜனவரி மாத இறுதி வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். தற்போது பலேனோக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.