புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர், இன்னோவா கிரிஸ்டா விற்பனைக்கு வந்தது

0

Toyota Innova Crysta

2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களில் கூடுதல் வசதிகள் மற்றும் இன்டிரியர் டிசைன் மேம்பாடுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

மெக்கானிக்கல் மற்றும் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை கொண்டு இந்த புதிய மேம்பாடுகளை டொயோட்டா இந்தியா வழங்கியுள்ளது.

Toyota Innova Crysta dashboard

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்

கம்பீரமான எஸ்யூவி என பெயர் பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலில் வெப்பத்தை தவிர்க்கும் கண்ணாடி , துளையிடப்பட்ட லெதர் இருக்கை மற்றும் Chamois நிறத்திலான இன்டிரியரை கொண்டுள்ளது.

இன்னோவா கிரிஸ்டா காரின் டீசல் என்ஜின் பெற்ற மாடலில் மட்டும் புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. துளையிடப்பட்ட லெதர் இருக்கை, யூஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை  ZX மற்றும் ZX AT , டூரிங் ஸ்போர்ட் ஆகியவற்றில் மட்டும் பெற்றுள்ளது.

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் விலை ரூ.15.67 லட்சம் மற்றும் ரூ. 23.47 லட்சம் வரை ஆகும். 2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் விலை ரூ. 29.84 லட்சம் மற்றும் ரூ. 33.60 லட்சம் ஆகும்.

Toyota fortuner suvToyota fortuner