கூடுதல் பவருடன் வந்த டாடா நெக்ஸான் பெட்ரோல் எஸ்யூவி விபரம்

0

nexon suv

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த மாடலின் பவர் இப்போது 10 ஹெச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வென்யூ எஸ்யூவி மற்றும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு இணையான போட்டியாக விளங்குகின்றது.

Google News

முன்பாக பிஎஸ்4 மாடலாக இருந்த போது 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தி வந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இப்போது 120 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸை பெறுகின்றது.

அடுத்ததாக பிஎஸ்6 டீசல் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். இந்த என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.

2020 டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை ரூ.6.95 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 8.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

பிஎஸ்6 பெட்ரோல் டீசல்
Tata Nexon XE ரூ. 6.95 லட்சம் ரூ. 8.45 லட்சம்
Tata Nexon XM ரூ. 7.70 லட்சம் ரூ. 9.20 லட்சம்
Tata Nexon XMA ரூ. 8.30 லட்சம் ரூ. 9.80 லட்சம்
Tata Nexon XZ ரூ. 8.70 லட்சம் ரூ. 10.20 லட்சம்
Tata Nexon XZ+ ரூ. 9.70 லட்சம் ரூ. 11.20 லட்சம்
Tata Nexon XZA+ ரூ. 10.30 லட்சம் ரூ. 11.80 லட்சம்
Tata Nexon XZ+ (O) ரூ. 10.60 லட்சம் ரூ. 12.10 லட்சம்
Tata Nexon XZA+ (O) ரூ. 11.20 லட்சம் ரூ. 12.70 லட்சம்