விரைவில் 8 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய் இந்தியா

0

மார்க்கெட் ஷேர்களை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட், அடுத்த 2 ஆண்டுகளில் 8 புதிய தயாரிப்புகளை, எலக்ட்ரிக் எஸ்யூவி-களுடன் இணைந்து வெளியிட்ட முடிவு செய்துள்ளது.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது 19 ஆண்டு 9 மாத சேவையில், அதிவேகமான ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக விளங்கியதோடு, 8 மில்லியன் கார்களை தயாரித்துள்ளது.

Google News

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவன தலைவர் க்கூ (Koo), இந்தியாவில் எங்கள் பயணம் 20 ஆண்டுகளை அடைந்துள்ளது. இதனால் எங்கள் சேவையை இந்திய மார்க்கெட்டில் மேலும் வலுப்படுத்தி கொள்ளும் நோக்கில், 8 புதிய தயாரிப்புகளை 2018 முதல் 2020 இடைப்பட்ட ஆண்டுகளில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் எலக்ட்ரிக் எஸ்யூவி- மாடலும் அடங்கும் என்றார்.

வரும் 2020ம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு விதிகள் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய க்கூ, எதிர்காலம் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், எங்கள் நிறுவனம் புதிய மாசு கட்டுப்பாட்டு விதிககளை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களையும் தயாரிக்க உள்ளது.

7.13 லட்சம் யூனிட்களாக உள்ள தங்கள் தயாரிப்பு திறனை 7.50 யூனிட்களாக அதிகரிக்கவும், இந்த திறன் அதிகரிப்பை தற்போதய முதலீட்டிலேயே மேற்கொள்ளவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் சிறந்த மாடலான இருந்ததோடு, பின்னர் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்ட சான்ட்ரோ, வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 8 தயாரிப்புகளில் முதல் தயாரிப்பாக இருக்கும். தற்போது இது AH2 என்ற குறியீட்டு பெயரில் வரவுள்ள இந்த மாடல் சான்ட்ரோ என்பதனை முன்பாக கொண்டு கூடுதல் பெயர் இணைக்கப்பட்டதாக வந்துள்ளது.

தற்போது இயான், கிராண்ட் i10, எலைட் i20, ஆக்ட்டிவ் i20, எக்ஸ்சென்ட், வெர்னா, எலன்ட்ரா, டூஸான் மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகிய 9 கார் மாடல்களை ஹுண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.