ரூ.1.59 லட்சம் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை குறைந்தது

0

Hyundai Kona EV

ஜிஎஸ்டி வரி மின்சார வாகனங்களுக்கு குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 1 லட்சத்து 59 ஆயிரம் வரை ஹூண்டாய் குறைத்து தற்போது 23 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் என (எக்ஸ்ஷோரூம்) நிர்ணையித்துள்ளது.

Google News

மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. முன்பாக டிகோர் இவெரிட்டோ உட்பட மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களான ஏதெர், ஹீரோ எலெகட்ரிக் போன்ற நிறுவனங்களும் தங்களது மாடலின் விலை குறைத்திருந்தது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஈக்கோ, கம்ஃபார்ட் , மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமாக டிரைவிங் மோடுகள் உள்ளன.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். சென்னை உட்பட பெரும்பாலான முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் டிசி ஃபாஸ்ட் சார்ஜரை இந்நிறுவனம் நிறுவி வருகின்றது.

17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் தானியங்கி எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்-லைட்டுகள், பிளாஸ்டிக் பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன. இந்தியாவுக்கான ஹூண்டாயின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வந்துள்ளது. இந்த காரில் 4 வண்ண விருப்பங்கள் (வெள்ளை, வெள்ளி, நீலம் மற்றும் கருப்பு) மற்றும் ஒரு இரட்டை தொனி வெளிப்புறம் (கருப்பு கூரையுடன் வெள்ளை) விருப்பத்தில் கிடைக்கும், இந்த நிறம் பெற்ற மாடல் சாதாரன நிறத்தை விட விலை ரூ .20,000 அதிகமாகும்.

பாதுகாப்பு கருவிகளாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய ஈபிடி, ஈஎஸ்சி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவை அடங்கும். இந்த காரில் மெய்நிகர் என்ஜின் சவுண்ட் சிஸ்டத்தையும் (பெட்ரோல் என்ஜின் போன்ற ஒலியைப் பிரதிபலிக்கும் சாதனம்) இந்த வசதி சாலையில் உள்ள மற்ற பயனாளர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும்.

ஹூண்டாய் Kona எலக்ட்ரிக் விலை – ரூ.23.71 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)